இந்திய தரைப்படைக்கு 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்கா விருப்பம் !!

இந்திய தரைப்படைக்கு சுமார் 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய தரைப்படை 6 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க BOEING நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது அவற்றின் டெலிவரி அடுத்த ஆண்டு துவங்க உள்ள நிலையில்

தற்போது BOEING நிறுவனமானது தானே நடத்திய ஆய்வில் இந்திய தரைப்படைக்கு கவச எதிர்ப்பு திறன்களை வளர்த்து கொள்ள சுமார் 60 APACHE தாக்குதல் ஹெலிகாப்டர்கள் தேவை என கணித்துள்ளது.

மேலும் APACHE ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தி வரப்படும் சக்திவாய்ந்த LONGBOW ரேடாரை தயாரிக்கும் NORTHROP GRUMMAN நிறுவனமும் வழக்கத்தை விட 50% அளவுக்கு மலிவான விலையில் அவற்றை இந்திய தரைப்படைக்கு தர முன்வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.