1 min read
செயற்கைகோள் எதிர்ப்பு சோதனைகளை நிறுத்த போவதாக அறிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் !!
அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரீஸ் சமீபத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வான்டன்பர்க் விமானப்படை தளத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பேசிய அவர் அமெரிக்கா இனி செயற்கைகோள் எதிர்ப்பு அல்லது அழிப்பு சோதனைகளை நடத்தாது எனவும் அத்தகைய சோதனைகள் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கும் எனவும் இந்த நிலைபாட்டை உலகளாவிய ரீதியில் விண்வெளியில் பொறுப்பான செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நிலைநாட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.