LTTE மற்றும் மியான்மர் ஆயுத குழுக்களுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கைது நடவடிக்கையில் அமெரிக்கா !!

ஜப்பானிய யகுசா குழுவின் தலைவன் ஒருவனை அமெரிக்க அரசு மூன்று தாய்லாந்து நாட்டவர்களுடன் கைது செய்துள்ளது.

இவர்கள் ஹெராயின் மற்றும் மெத்தாம்ஃப்ட்டமைன் ஆகிய போதை பொருட்களை கடத்தியதோடு மட்டுமின்றி

அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளை சேர்ந்த ஆயுத குழுக்களுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க முயற்சி செய்து உள்ளனர்.

ஜப்பானை சேர்ந்த டகேஷி எபிசாவா தாய்லாந்து நாட்டை சேர்ந்த சோம்பாக் ரூக்ராசரண்ரீ, சோம்ஃபோப் ஷிங்காசிரி மற்றும் சுக்சான் ஜூல்லானன் ஆகியோருடன் இணைந்து

மியான்மர் நாட்டில் சீன எல்லையோரம் இயங்கி வரும் ஐக்கிய வா மாகாண ராணுவம் (UWSA) எனும் ஆயுத குழுவின் ஹெராயின் மற்றும் மெத்தாம்ஃபட்டமைன் ஆகிய போதை மருந்துகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விற்க முயன்றுள்ளனர்.

இதில் கிடைக்கும் வருவாயை கொண்டு இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை UWSA, KNU, SSU ஆகிய மியான்மர் ஆயுத குழுக்களுக்கும்

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளில் முன்னர் கோலோச்சி கொண்டிருந்த நமக்கு நன்கு பரிச்சயமான விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் மேற்குறிப்பிட்ட ஆயுதங்களை வாங்க முயற்சி செய்ததாக அமெரிக்கா கைது செய்துள்ளது.

எபிசாவா மற்றும் அவரது சகாக்கள் அமெரிக்க போதை பொருள் முகமை அதிகாரிகள் மற்றும் நெதர்லாந்து காவல்துறை அதிகாரிகளால் திட்டமிட்டு ஆயுத வியாபாரிகள் போல் நடித்து சிக்கவைக்கப்பட்டு உள்ளனர்.

எபிசாவா உடன் கைதான ஜூல்லானன் அமெரிக்க மற்றும் தாய்லாந்து நாடுகளில் குடியுரிமை உள்ளது மேலும் அவன் ஒய்வு பெற்ற தாய்லாந்து விமானப்படை ஜெனரல் ஆவான், ரூக்ராசரண்ரீயும் ஒய்வு பெற்ற தாய்லாந்து ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

எபிசாவா நெதர்லாந்து நாட்டின் கோபன்ஹேகன் நகரில் இந்த ஆயுதங்களை பார்வையிட்டு உள்ளதும் குறிப்பாக ஸ்டிங்கர் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஆகியவை குற்றபத்திரிக்கையில் இணைக்கப்பட்டு உள்ளன, மூவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.