காஷ்மீரில் 42 பயங்கரவாதிகளுக்கு சங்கு ஊதிய பாதுகாப்பு படைகள் !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on காஷ்மீரில் 42 பயங்கரவாதிகளுக்கு சங்கு ஊதிய பாதுகாப்பு படைகள் !!

கடந்த மூன்று மாத காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சுமார் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாக அம்மாநில காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 பாகிஸ்தானிய/வெளிநாட்டு பயங்கரவாதிகள் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக அமைந்துள்ளது.

சமீபத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட CRPF வீரருக்கு இறுதி மரியாதை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போது காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.