PLOS திறன் கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெறும் உக்ரைன் !!

  • Tamil Defense
  • April 13, 2022
  • Comments Off on PLOS திறன் கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெறும் உக்ரைன் !!

சமீபத்தில் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 100 மில்லியன் பவுன்டுகள் மதிப்பிலான ராணுவ உதவி திட்டத்தை உக்ரைனுக்காக அறிவித்தது.

இந்த உதவி திட்டத்தில் 120 MASTIFF ரக கவச வாகனங்கள், STARSTREEK வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றுடன் SAAB மற்றும் THALES நிறுவனங்களின் PLOS திறன் கொண்ட 800 NLAW டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அடக்கம்.

இந்த PLOS – Predicted Line of Sight திறனை பயன்படுத்தி ஏவுகணையை ஏவினால் இதன் வேகம் பன்மடங்கு குறையும் அதாவது வழக்கமாக ஒரு நொடிக்கு 200மீட்டர் பாயும் இது PLOS மோடில் ஒரு நொடிக்கு 40 மீட்டர் தான் பயணிக்கும்.

இதற்கு காரணம் வேகத்தை பன்மடங்கு குறைத்து ஏவுகணை பாயும் ஒட்டுமொத்த தூரத்தை அதிகரிப்பது தான் அதாவது அதிக தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்க உதவும் என கூறப்படுகிறது.

மேலும் இதன் HEAT – High Explosive Anti Tank ரக குண்டுகள் சுமார் 500 மில்லிமீட்டர் தடிமனான கவசத்தையும் அசால்ட்டாக துளைத்து செல்லும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.