கூட்டாக ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on கூட்டாக ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா !!

அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் தவிரத்து புதிய அதிநவீன மின்னனு போர் முறை தொழில்நுட்பங்களையும் உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு அதிவேக அணுசார் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை கட்டி கொடுக்க மூன்று நாடுகளும் உருவாக்கிய ஆக்கஸ் அமைப்பின் திட்டங்களில் இவையும் அடங்கும் என கூறப்படுகிறது.

பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.