இங்கிலாந்து உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவியாக மஸ்டீஃப் ரக கவச வாகனங்களை அனுப்பி வைக்க உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வால்லெஸ் இந்த தகவலை வெளியிட்டார் ஆனால் எத்தனை வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பது பற்றிய தகவல் இல்லை.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சனும் உக்ரைனுக்கு சுமார் 100 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான ராணுவ உதவியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.