
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குர்தீஷ் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து துருக்கி எல்லை தாண்டிய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை துவங்கி உள்ளது.
திங்கட்கிழமை இந்த ராணுவ நடவடிக்கைகளின் நிலவரம் குறித்து பேசிய துருக்கி பாதுகாப்பு அமைச்சர் துலாசி ஹக்கார் 4 ராணுவ வீரர்களை இழந்துள்ளதாகவும் 19 குர்தீஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
துருக்கி விமானப்படையின் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள், பிரங்கிகள் மூலமாக தாக்குதல் நடத்தி பின்னர் தரைவழியாகவும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் துருக்கி ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஆபரேஷன் க்ளாவ் லாக் என்ற இந்த நடவடிக்கையில் மெட்டினா, ஸாப், அவாஷின்-பாஸ்யான் பகுதிகளில் உள்ள பங்கர்கள், சுரங்கங்கள், ஆயுத கிட்டங்கிகள் மற்றும் PKK படையின் தலைமையகம் ஆகியவை தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன.