அகில இந்திய குதிரையேற்ற போட்டியில் வென்ற தமிழக காவல்துறை வீராங்கனை !!

ஹரியானா மாநிலம் பாணுவில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் அகில இந்திய காவல்படை குதிரையேற்ற போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் கலந்து கொண்ட தமிழக காவல்துறையின் வீராங்கனை காவலர் சுகன்யா அவர்கள் திறமையாக செயல்பட்டு முதல் பரிசை வென்றுள்ளார்.

தங்க பதக்கம் பெற்ற காவலர் சுகன்யா பேசும்போது தனது குதிரை GRAND CELEBRATION “GOLDY” ம் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் என்று குறிப்பிட்டார்.