காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் !!

  • Tamil Defense
  • April 19, 2022
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ககபோரா பகுதியில் பயங்கரவாதிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலில் இரண்டு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர்களில் ஒருவர் வீரமரணம் அடைந்து உள்ளார்.

மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் அவருடன் காலை நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்து வேறே இரண்டு ரயில்வே பாதுகாப்பு படையினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல்களை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.