அடுத்த மாதம் வெளிவரும் TEJAS MK-1A ரகத்தின் சோதனை விமானம் !!

  • Tamil Defense
  • April 24, 2022
  • Comments Off on அடுத்த மாதம் வெளிவரும் TEJAS MK-1A ரகத்தின் சோதனை விமானம் !!

அடுத்த மாதம் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தின் ஒரு வடிவம் வெளி வருகிறது இது MK-1A வுக்கான சோதனை விமானமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விமானத்தை வைத்து தான் தேஜாஸ் மார்க்-1ஏ விமானத்திற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை அதில் இணைத்து சோதனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல்கட்டமாக இஸ்ரேலிய ELTA ELM-2052 AESA ஏஸா ரக தாக்குதல் கட்டுபாட்டு ரேடாரை இணைத்து தரையில் வைத்து சோதனை செய்ய உள்ளனர்.

மேலும் இந்த மார்க்-1ஏ விமானத்தில் 300 கிலோ எடை நீக்கப்படும் அல்லது சமமான அளவில் கட்டமைக்கப்படும் எனவும் ஜூன் மாதம் முதல் பறக்கும் சோதனை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.