114 போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் முன்னனியில் உள்ள TATA !!

  • Tamil Defense
  • April 28, 2022
  • Comments Off on 114 போர் விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் முன்னனியில் உள்ள TATA !!

இந்திய விமானப்படைக்கு 114 Multi Role Fighter Aircraft பலதிறன் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி போர் விமானங்களை தேர்வு செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு பக்கம் இந்தியாவில் தயாரிக்க தகுந்த ஒரு இந்திய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இடம்பெறும் போட்டியில் இந்தியாவின் TATA குழுமம் முன்னனியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதற்கு காரணம் ஏற்கனவே AIRBUS நிறுவனத்துடன் இணைந்து இந்திய விமானப்படைக்கு C-295 CASA போக்குவரத்து விமானங்களை தயாரித்து வருவதாகும்.

இது தவிர அமெரிக்காவின் LOCKHEED MARTIN நிறுவனமானது தனது F-21 ரக போர் விமானத்தை TATA குழுமத்துடன் இணைந்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க முன்வந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.