டாடா குழுமத்தின் ஒரு பிரிவான டாடா அதிநவீன தொழில்நுட்ப நிறுவனம் TASL – TATA ADVANCED SYSTEMS LIMITED கெஸ்ட்ரல் வாகனங்களை இந்திய தரைப்படைக்கு டெலிவரி செய்துள்ளது.
இதன் மூலமாக டாடா சக்கரங்கள் கொண்ட கவச சண்டை வாகனங்களை (Wheeled Armoured Combat Vehicles) தயாரித்து இந்திய ராணுவத்திற்கு டெலிவரி செய்த முதலாவது தனியார் நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது.
IPMV – Infantry Protected Mobility Vehicle அதாவது பாதுகாக்கப்பட்ட காலாட்படை வாகனங்கள் WhAP-Wheeled Armoured Platform ஐ அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதில் DRDO அமைப்பும் பங்கு பெற்றுள்ளது.
முதல்கட்டமாக இத்தகைய ஆறு IPMV வாகனங்கள் இந்திய தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன இவை லடாக் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.