புதிய சுதேசி மிதவை குண்டு லடாக்கில் சோதனை !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on புதிய சுதேசி மிதவை குண்டு லடாக்கில் சோதனை !!

சோலார் இண்டஸ்ட்ரீஸ் SOLAR INDUSTRIES எனும் இந்திய தனியார் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த அதிநவீன ஆயுதத்தின் சோதனை லடாக்கில் நடைபெற்றுள்ளது.

Loitering Munition என அறியப்படும் மிதவை குண்டுகள் எதிர்கால போர் களத்தை அடியோடு மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை இவை மிகவும் ஆபத்தானவையாக பார்க்கப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் முதல்முறையாக ஒரு தனியார் நிறுவனம் இத்தகைய ஆயுதத்தை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் SOLAR INDUSTRIES நிறுவனத்தின் ஒரு பிரிவான Economic Explosives Ltd (EEL) பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கும் Z Motion Autonomus Pvt. Ltd நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்து தயாரித்த Loitering Munition மிதவை குண்டுகளை சோதனை செய்து உள்ளது.

கடந்த மாதம் இவ்விரு நிறுவனங்கள் உருவாக்கிய LM-1, LM-0 மற்றும் HEXACOPTER ஆகிய மிதவை குண்டுகள் லடாக் மாநிலத்தின் நூப்ரா பள்ளதாக்கு (Nubra Valley) பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

LM-0 மற்றும் LM-1 ஆகியவை சோதனைகளில் தங்களது முழு திறனான 60 நிமிட நேரம் வரை இயங்கின, HEXACOPTER 30 நிமிடம் வரை இயங்கி ஒரு வரலாற்று சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது 4 கிலோ அளவிலான வெடிகுண்டை சுமந்து கொண்டு சுமார் 4500 மீ உயரம் வரை பறந்த உலகின் முதலாவது மனிதர்களே சுமந்து செல்ல கூடிய மிதவை குண்டு எனும் சாதனை தான் அது.