
உக்ரைன் நாட்டிற்கு ஸ்லவாக்கியா நாடானது தனது எஸ்300 வான் பாதுகாப்பு அமைப்புகளை ராணுவ உதவியாக அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைன் தொடர்ந்து பல்வேறு நாடுகளிடம் ஆயுத உதவிகளை கோரி வருகிறது.
சமீபத்தில் கூட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமித்ரி குலேபா நேட்டோ நாடுகளிடம் கவச வாகனங்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.