இன்று அதாவது 20ஆம் தேதி கடைசியும் ஆறாவதுமான ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி ( Scorpene class submarine) கப்பல் மும்பை மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் வைத்து நடைபெறும் விழாவில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ப்ராஜெக்ட்-75 ஸ்கார்பீன் திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட கல்வரி, காந்தேரி, கரன்ஜ், வேலா ஆகியவை படையில் இணைந்த நிலையில் ஐந்தாவது கப்பலான வாகீர் கடற்சோதனையில் உள்ளது அதுவும் விரைவில் படையில் இணையும்.
ப்ராஜெக்ட் 75 திட்டத்தின்கீழ் இந்திய கடற்படைக்காக 24 நீர்மூழ்கிகளை (18 டீசல் எலெக்ட்ரிக் மற்றும் 6 அணுசக்தி நீர்மூழ்கிகள்) 30 ஆண்டுகளில் கட்ட வேண்டும் என்பது குறிக்கோள் ஆகும்.
அந்த வகையில் 6 ஸ்கார்பீன் டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளும் இரண்டு அரிஹந்த் ரக அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும் கட்டப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தற்போது பாகிஸ்தான் கடற்படையில் 10 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும், சீன கடற்படையில் 15 அணுசக்தி நீர்மூழ்கிகளும் 64 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.