AFSPA சட்டம் விலக்கப்பட்ட பகுதிகளின் விரிவான பட்டியல் !!

  • Tamil Defense
  • April 4, 2022
  • Comments Off on AFSPA சட்டம் விலக்கப்பட்ட பகுதிகளின் விரிவான பட்டியல் !!

சமீபத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் AFSPA எனும் ராணுவ படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மூன்று வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் விலக்குவதாக அறிவித்தது.

1) நாகலாந்து 7 மாவட்டங்கள்: இந்த மாநிலத்தின் டுவென்சாங்,ஷமாதோர் மற்றும் செமின்யூ ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து முழுமையாகவும் கோஹிமா,வோகா, லாங்லெங் மற்றும் மோகோக்சூங் ஆகிய 4 மாவட்டங்களில் பாதி இடங்களில் இச்சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

2) அசாம் 23 மாவட்டங்கள்: இங்கு தேமாஜி, லகிம்பூர், மஜூலி, பிஸ்வநாத், சோனிட்பூர், நகாவோன், ஹோஜய், மோரிகோவான், காம்ரூப் (எம்), தர்ராங், காம்ரூப், நல்பாரி, பர்பெட்டா, கோல்பாரா, போங்கய்கோவான், தூப்ரி, தெற்கு சல்மாரா, மன்கச்சார், கோக்ரஜார், சிராங், பக்ஸா, உடல்குரி, கரீம்கன்ஜ், ஹய்லாகன்டி , கச்சார் மற்றும் லகிம்பூர் துணை மாவட்டங்கள்.

3) மணிப்பூர் 6 மாவட்டங்கள்:
6 மாவட்டங்கள் மற்றும் 15 காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தலைநகர் இம்பால் நகரத்தின் மேற்கில் உள்ள இம்பால், லெம்ஃபெல், நகரம், சிங்ஜாமெய், செக்மாய், லம்சாங், பட்சோல்

மேலும் இம்பால் கிழக்கில் உள்ள போரோம்பாட், ஹெயின்காங், லம்லய் இரில்பூங், தவ்பால், பிஷ்ணுபூர், காக்சிங் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.