இஸ்ரேலில் கொடுர பயங்கரவாத தாக்குதல் போர் களமான டெல் அவிவ் நகரில் ராணுவம் குவிப்பு !!

  • Tamil Defense
  • April 8, 2022
  • Comments Off on இஸ்ரேலில் கொடுர பயங்கரவாத தாக்குதல் போர் களமான டெல் அவிவ் நகரில் ராணுவம் குவிப்பு !!

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் பயங்கரவாதி ஒருவன் நடத்திய கொலைவெறி துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில்

பலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், கடந்த மூன்று வாரங்களில் நடைபெற்ற மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து டெல் அவிவ் நகரத்தில் இஸ்ரேலிய காவல்துறை துணை ராணுவம் மற்றும் ராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக இஸ்ரேலிய சிறப்பு படைகள் ஒவ்வொரு வீடு கடைகளில் புகுந்து பயங்கரவாதியை தேடி வருகின்றனர்.

டெல் அவிவ் நகரமே போர்களம் போல் காட்சி அளிப்பதாகவும் மக்கள் அனைவரும் பதட்ட நிலையில் இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இஸ்ரேலிய பிரதமர் பென்னட் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளார்.