ஐரோப்பிய விமானங்களை வாங்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் முக்கிய ஐரோப்பிய கூட்டாளி !!

  • Tamil Defense
  • April 26, 2022
  • Comments Off on ஐரோப்பிய விமானங்களை வாங்கும் சீனா மற்றும் ரஷ்யாவின் முக்கிய ஐரோப்பிய கூட்டாளி !!

கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியா மிக நீண்ட காலமாகவே ரஷ்யா மற்றும் சீனாவுடன் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள நாடாகும்

தற்போது செர்பியா ஐரோப்பிய நாடுகள் தயாரித்த போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது அந்த வகையில் ஏற்கனவே ஃபிரான்ஸிடம் இருந்து 12 ரஃபேல் DASSAULT RAFALE போர் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தற்போது இங்கிலாந்திடம் இருந்து யூரோஃபைட்டர் டைஃபூன் EUROFIGHTER TYPHOON விமானங்களை வாங்கவும் இரண்டு விமானங்களிலும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளையும் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சமீபத்தில் செர்பியா சீனாவிடம் இருந்து மிகவும் ரகசியமாக HK-22 ரக வான் பாதுகாப்பு அமைப்புகளை பெற்று கொண்டது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.