இந்த வருட இறுதியில் இந்தியா வரும் இரண்டாவது S-400 TRIUMF வான் பாதுகாப்பு அமைப்பு !!

  • Tamil Defense
  • April 18, 2022
  • Comments Off on இந்த வருட இறுதியில் இந்தியா வரும் இரண்டாவது S-400 TRIUMF வான் பாதுகாப்பு அமைப்பு !!

இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது S-400 TRIUMF வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து இந்த ஆண்டு இறுதியில் இரண்டாவது இந்திய S400 ரெஜிமென்ட் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் முதலாவது S400 படையணி டெலிவரி செய்யப்பட்டு இந்திய விமானப்படையால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம்.

சமீபத்தில் கூட S400 TRIMUF வான் பாதுகாப்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் பாகங்கள் கப்பல் மூலமாக இந்தியாவுக்கு டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.