செர்னோபில் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ரஷ்ய படையினர் !!

  • Tamil Defense
  • April 1, 2022
  • Comments Off on செர்னோபில் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட ரஷ்ய படையினர் !!

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை மையத்தில் பணியில் இருந்த ரஷ்ய படையினர் அணு கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வீரர்கள் பெலாரஸ் நாட்டில் உள்ள ஒரு சிறப்பு சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மூத்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ரஷ்ய படைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.