ஆண்டனோவ் விமான தளத்தில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள் !!

வியாழக்கிழமை அன்று எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்கள் வாயிலாக ஆண்டனோவ் விமான தளத்தில் இருந்து ரஷ்யபடைகள் பின்வாங்கியது தெரிய வந்துள்ளது.

மேக்ஸார் டெக்னாலஜிஸ் எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த போது இந்த தகவல் வெளியாகியுள்ளது இதனை அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ராணுவ வீரர்கள் பிரங்கிகள் கவச வாகனங்கள் ஆகியவை விமான நிலையத்தில் இருந்து எங்கு சென்றன என்பது பற்றிய எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.