முதல்முறையாக சண்டையில் சு-35 விமானத்தை இழந்த ரஷ்யா !!

  • Tamil Defense
  • April 6, 2022
  • Comments Off on முதல்முறையாக சண்டையில் சு-35 விமானத்தை இழந்த ரஷ்யா !!

ஏப்ரல் 3ஆம் தேதியன்று ரஷ்யா முதல்முறையாக தனது ஃப்ளாங்கர் என பிரபலமாக அறியப்படும் “சுகோய்35 ஈ” எனும் போர் விமானத்தை சண்டையில் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனுடைய கார்கிவ் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த போர் விமானத்தின் சிதிலங்கள் பற்றிய புகைப்படங்கள் சர்வதேச அளவில் வைரலாகி உள்ளன.

ஆனால் தற்போது வரை இந்த போர் விமானம் எப்போது எப்படி சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.