இந்தியா வந்து சேர்ந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் !!
1 min read

இந்தியா வந்து சேர்ந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் !!

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் இந்தியா சுற்றுபயணமாக தலைநகர் தில்லி வந்து சேர்ந்துள்ளார்.

அவரை விமான நிலையத்தில் ராணுவ அதிகாரிகள், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் மற்றும் இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி ஆகியோர் வரவேற்றனர்.

நாளை அவர் இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இடையே உக்ரைன் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்ற சில மணி நேரங்களில் லாவ்ரோவ் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.