ரஷ்யாவை தண்டியுங்கள் அல்லது சபையை கலைத்து விடுங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய உக்ரைன் அதிபர் !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on ரஷ்யாவை தண்டியுங்கள் அல்லது சபையை கலைத்து விடுங்கள் ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய உக்ரைன் அதிபர் !!

உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காணொளி வாயிலாக பேசினார்.

அப்போது அவர் பூகா பகுதியில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய கொலைகளை சுட்டி காட்டி உங்கள் முன் இரண்டு வழிகள் தான் உள்ளன,

முதலாவது ரஷ்யாவை தண்டிப்பது இரண்டாவது இந்த சபையை நீங்களே கலைத்து விடுவது என்பன தான் அவை என காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் இந்த போரை துவங்கிய ரஷ்யா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக இருந்து கொண்டு தனக்கு எதிரான தீர்மானங்களை வீட்டோ மூலமாக முடக்கிய விடுகிறது

ஆகவே நிரந்தர உறுப்பினராக இருக்கும் ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கி வெளியேற்றுமாறும் அவர் கேட்டு கொண்டார்.