1 min read
போலந்தில் அணு ஆயுதங்களை நிறுத்த அமெரிக்காவுக்கு அனுமதி ??
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து உள்ளது கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பல்வேறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோ மற்றும் அமெரிக்கா உடனான ஒத்துழைப்பை அதிகபடுத்த விரும்புகின்றன.
அந்த வகையில் தற்போது போலந்து நாடு தங்களது மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்களை நிறுத்த அனுமதி அளிக்கும் எண்ணத்தில் உள்ளதாக தெரிகிறது.
இந்த தகவலை போலந்து நாட்டின் துணை பிரதமர் பியோடிர் க்லின்ஸ்கி தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.