ஃபிரான்ஸ் டென்மார்க் ஜெர்மனி செல்லும் இந்திய பிரதமர் மோடி !!

  • Tamil Defense
  • April 29, 2022
  • Comments Off on ஃபிரான்ஸ் டென்மார்க் ஜெர்மனி செல்லும் இந்திய பிரதமர் மோடி !!

வருகிற மே மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இந்திய பிரதமர் மோடி ஃபிரான்ஸ் ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணமாக செல்ல உள்ளார்.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சான்ஸலர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி Intra Governmental Consultationஐ துவங்கி வைக்க உள்ளனர்.

பின்னர் அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேதன் சென்று அங்கு பிரதமர் மெட்டெ ஃப்ரெட்ரிக்ஸன் அவர்களை சந்தித்து விட்டு 2ஆவது இந்திய-நார்டிக் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

அங்கிருந்து புறப்பட்டு ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் பிரதமர் அங்கு அதிபர் மேக்ரானை சந்தித்து பேசி விட்டு நாடு திரும்ப உள்ளதாக இந்திய வெளியுறவு துறை தகவல் வெளியிட்டுள்ளது.