(SHAHEEN-3) ஷாஹீன்-3 பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on (SHAHEEN-3) ஷாஹீன்-3 பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான் !!

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் அங்கு அரசியல் நெருக்கடி நிலவும் சூழலிலும் ஷாஹீன்-3 தரை தாக்குதல் பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பு பிரிவு ஷாஹீன்-3 ஏவுகணையின் திறன்களை உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.

சுமார் 2750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளில் அணு ஆயுதமும் பொருத்தி ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.