பாலகோட் அருகே ரேடார் அமைப்பை நிறுவும் பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • April 10, 2022
  • Comments Off on பாலகோட் அருகே ரேடார் அமைப்பை நிறுவும் பாகிஸ்தான் !!

பாகிஸ்தான் ராணுவம் பாலகோட்டில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கைபர் பக்தூன்வா மாகாணத்தின் சேரட் பகுதியில் ரேடார் அமைப்பை நிறுவி வருகிறது.

பாகிஸ்தான் தனது எல்லையோர பாதுகாப்பை உறுதிபடுத்தும் எண்ணத்தோடு பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் தனது ரேடார் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது.

TPS-77 ரக பலதிறன் ரேடாரை தான் தற்போது பாகிஸ்தான் நிறுவி வருகிறது இவற்றால் ட்ரோன்கள்,வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடிக்க முடியும் என கூறப்படுகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய விமானப்படை பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை இரவோடு இரவாக ஸ்பைஸ் ரக குண்டுகளை வீசி தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.