குஜராத்தில் 280 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்துடன் பறிமுதல் செய்யப்பட்ட பாக் படகு !!

  • Tamil Defense
  • April 25, 2022
  • Comments Off on குஜராத்தில் 280 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மருந்துடன் பறிமுதல் செய்யப்பட்ட பாக் படகு !!

இந்திய கடலோர காவல் படை மற்றும் குஜராத் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய நடவடிக்கை ஒன்றில் அல் ஹாஜ் எனும் பாகிஸ்தானை சேர்ந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த படகில் சுமார் 280 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதை மருந்துகள் இருந்தது சோதனையில் கண்டுபிடிக்க பட்ட நிலையில் படகில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர் பறிமுதல் செய்யப்பட்ட படகு ஜகாவு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த படகில் சுமார் 2000 கிலோ மீன்களும் 600 லிட்டர் எரிபொருளும் இருந்தது மேலதிக விசாரணைக்கு வேண்டி இந்த படகு போர்பந்தர் கடலோர காவல்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக துப்பு கிடைத்த நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்திய கடலோர காவல் படை தனது ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியது அப்போது இந்திய எல்லைக்குள் அதிக வேகத்துடன் அத்துமீறி நுழைந்த பாக் படகை இந்திய கடலோர காவல் படை படகு அதிவேகமாக விரட்டி சென்று தாக்குதல் நடத்தி நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் ICGS அங்கித் எனும் ரோந்து கலன் உதவியுடன் இந்த படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது ஜனவரி மாதம் இதே ரோந்து கலன் 10 பாகிஸ்தானியர்களுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.