ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை !!

  • Tamil Defense
  • April 17, 2022
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானப்படை !!

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் குனார் மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல்களில் 30 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 பாகிஸ்தான் போர் விமானங்கள் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஸ்புர்ரா மாவட்டத்தின் மிர்பார், மான்டெஹ், ஷைதி மற்றும் காய் ஆகிய பகுதிகளை தாக்கி உள்ளன.

இந்த தாக்குதல்களை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களின் அரசு பாகிஸ்தானுடைய இந்த செயல்பாடுகளை மிகவும் வன்மையாக கண்டித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை பொறுத்தவரை பாகிஸ்தானுடைய பாதுகாப்புக்கு எதிரான பயங்கரவாதிகள் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது