ஆப்கனுக்குள் விமானத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்- தாலிபன்கள் கடும் கண்டனம்

  • Tamil Defense
  • April 16, 2022
  • Comments Off on ஆப்கனுக்குள் விமானத் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்- தாலிபன்கள் கடும் கண்டனம்

ஆப்கனின் குனார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் பாக் விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.ஏப்ரல் 15 அன்று இரவு பாக் விமானப்படை விமானங்கள் தெற்கு கோஸ்ட் மகாணங்களில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

உள்ளூர் மக்கள் இதுகுறித்து பேசிய போது தாக்குதலில் இரு குடும்பத்தை சேர்ந்த 33 பேர் உயிரழந்ததாக கூறியுள்ளனர்.குனார் மற்றும் கோஸ்ட் மகாணங்களில் உள்ள TTP பயங்கரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியாக பாக் கூறியுள்ளது.

தாக்குதல் குறித்து தற்போது தாலிபன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.