மத்திய உள்துறை அமைச்சகம் NSG எனப்படும் தேசிய பாதுகாப்பு படைக்கு துணை ராணுவ படைகள் மற்றும் மாநில காவல்துறைகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு முறைகளில் பயிற்றுவிக்க இந்த மாத ஆரம்பத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உலகளாவிய அளவில் ட்ரோன்கள் ஆயுதமயமாக்கப்பட்டு பயன்படுத்தி வரப்படும் நிலையில் பல்வேறு மாநில காவல்துறைகள் தங்கள் காவலர்களுக்கு ட்ரோன் எதிர்ப்பு முறைகளை பயிற்றுவிக்க தேசிய பாதுகாப்பு படையின் உதவியை நாடி வருகின்றன.
இந்தியாவில் ட்ரோன் போர்முறை மற்றும் ட்ரோன் எதிர்ப்பு போர்முறை வளர்ந்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு படை உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டை தனது ட்ரோன் எதிர்ப்பு திறன்களை வளர்த்து கொண்டுள்ளது.
அந்த வகையில் தேசிய பாதுகாப்பு படை ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை மற்றும் பஞ்சாப் மாநில காவல்துறை ஆகியவற்றிற்கு ட்ரோன் எதிர்ப்பு போர்முறைகளில் பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு விமானப்படை தளம் மீது ட்ரோன்களை கொண்டு குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது மற்றும் அவ்வப்போது பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் எல்லை தாண்டி வந்து ஆயுதங்களையும் போதை மருந்து பொட்டலங்களையும் வீசி விட்டு செல்லும் நிகழ்வுகளால் இந்திய பாதுகாப்பு கட்டமைப்பு விழித்து கொண்டது இதையொட்டி தான் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.