இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வல்லரசும் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது: இம்ரான் கான் !!

  • Tamil Defense
  • April 9, 2022
  • Comments Off on இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வல்லரசும் இந்தியாவுக்கு உத்தரவிட முடியாது: இம்ரான் கான் !!

அதிகார சிக்கலில் சிக்கி பதவியை இழக்க போகும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் இந்தியாவிடம் இருந்து சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வல்லரசு நாடுகளாலும் இநதியாவுக்கு உத்தரவிடவோ இந்தியாவை கட்டாயபடுத்தவோ முடியாது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை சுதந்திரமானது உக்ரைன் ரஷ்ய போரில் எந்த மேற்குலக வல்லரசு நாடுகளாலும் இந்தியாவை அடிபணிய வைக்கமுடியவில்லை

ஆனால் பாகிஸ்தானை ஐரோப்பிய நாடுகள் நச்சரித்து கொண்டே இருந்தன நான் ரஷ்யாவுக்கு சுற்றுபயணமாக சென்றது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை

தேவையற்ற விஷயங்களில் பாகிஸ்தானை ஈடுபடுத்துவதை நான் விரும்பவில்லை பாகிஸ்தானுடைய வெளியுறவு கொள்கை முற்றிலும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாட்கள் முன்னர் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த அமெரிக்கா தலைமையில் சதி நடப்பதாகவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரசை பாகிஸ்தானில் தான அனுமதிக்க போவதில்லை எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் 1000 ஆண்டுகளுக்கு போர் செய்வோம் எனவும் இந்தியாவை பல துண்டுகளாக உடைப்போம் எனவும் கங்கணம் கட்டிய நாட்டின் தலைவர் இன்று இந்தியாவை புகழும் நிலையில் இருப்பதை ரசிக்கும் அதிர்ஷடநிலை நமக்கு ஏற்பட்டுள்ளது மிகழ்ச்சியானது என்றால் மிகையல்ல.