ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் முனைவர் தொபியாஸ் லிட்னர் இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல் எந்த பிரச்சினையும் தீராது என கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்தியா ஜெர்மனியின் மிக முக்கியமான நட்பு நாடு எனவும் தொழில்நுட்பம், கல்வி, பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
விரைவில் இந்திய பிரதமர் மோடி ஜெர்மனி செல்ல உள்ளார் என்பதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.