இந்தியா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த நிர்பய் ஏவுகணை ஒரு தொலைதூர நில தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையாகும்.
இந்த ஏவுகணையில் தற்போது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மாணிக் சிறிய ரக டர்போ ஃபேன் என்ஜின் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான சோதனைகளுக்காக 8 என்ஜின்கள் இந்த ஆண்டு தயாரிக்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு இந்த ஏவுகணைகளின் சோதனைகள் நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 1500கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்ட இந்த ஏவுகணையை போர்கப்பல், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் லாரிகளில் இருந்து ஏவ முடியும் என கூறப்படுகிறது.