இந்திய தேஜாஸுக்கு போட்டியாக துருக்கி களமிறக்கும் இலகுரக போர்விமானம் !!

மலேசியாவில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் துருக்கி தனது இலகுரக போர் விமானமான HURJETஐ காட்சிபடுத்தியுள்ளது.

மலேசிய விமானப்படைக்கு ஏற்கனவே இலகுரக போர் விமானங்கள் வாங்க நடைபெற்று வரும் தேர்வில் இந்திய தேஜாஸ் முன்னிலை வகித்து வருவது பலருக்கும் தெரிந்த விஷயமாகும்

இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தை கைபற்றும் எண்ணத்தோடு துருக்கியும் தனது விமானத்தை மலேசிய தலைநகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் காட்சிபடுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மலேசியா துருக்கி தயாரித்த பல்வேறு வகையான ராணுவ தளவாடங்களை அதிகளவில் பயன்படுத்தி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.