அமெரிக்க விமானப்படையின் புதிய அணு ஆயுத ஏவுகணை !!

  • Tamil Defense
  • April 7, 2022
  • Comments Off on அமெரிக்க விமானப்படையின் புதிய அணு ஆயுத ஏவுகணை !!

அமெரிக்க விமானப்படையின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LGM-35A SENTINEL என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து அதாவது ரகசிய பகுதியில் இருந்து இலக்கை நோக்கி ஏவப்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை அமெரிக்காவின் முப்பரிமாண அணு ஆயுத தாக்குதல் அமைப்பின் ஒரு அங்கமாக திகழும், மேலும் இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை மிகவும் நவீனமானதாகும்.

வையோமிங் மாகாணத்தில் உள்ள F E Warren விமானப்படை தளம், மான்டானா மாகாணத்தில் உள்ள MALMSTROM விமானப்படை தளம் மற்றும் வடக்கு டகோடா மாகாணத்தில் உள்ள மினாட் விமானப்படை தளங்களில் இந்த ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வரும் MINUTEMAN-3 ரக அணு ஆயுத ஏவுகணைகள் 50 ஆண்டுகளை சேவையில் நிறைவு செய்த நிலையில் தான் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த புதிய ஏவுகணைகள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் MINUTEMAN-3 ரக ஏவுகணைகள் தொடர்ந்து சேவையில் இருக்கும் எனவும் தற்போதைக்கு அந்த ஏவுகணைகளை படையில் இருந்து விலக்க போவதில்லை எனவும் அமெரிக்க விமானப்படையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.