155 நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள 4 லட்சம் அமெரிக்க வீரர்கள் !!

2023ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை முன்னிட்டு முப்படைகளுக்கான செனட் கமிட்டி முன்பு அமெரிக்க கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் மார்க் மைலி ஆஜரானார்.

அப்போது அவர் அந்த கமிட்டியினரிடம் உலகம் முழுவதும் சுமார் 155 நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள 4 லட்சம் அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவை பாதுகாக்க தினந்தோறும் நடவடிக்கைளை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

ஆகவே 2023ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட் எப்போதும் தயாரான தீரமான திறன்மிக்க அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்கள் மற்றும் கூட்டாளிகளை பாதுகாக்கும் படையாக அமெரிக்க ராணுவம் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்யும் எனவும் பேசியுள்ளார்.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு 2023ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு சுமார் 773 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இது 2020ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தனது வரலாற்றிலேயே தாக்கல் செய்த மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டான 778 பில்லியன் டாலரை விட 5 பில்லியன் டாலர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.