
நேட்டோ ராணுவ கூட்டமைப்பானது அதன் கிழக்கு எல்லையோர பகுதிகளில் முழு திறன்களுடன் ராணுவ படையணிகளை குவிக்க திட்டமிடுவதாக அதன் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து போர் நடத்தி வரும் காரணத்தால் நேட்டோ கூட்டமைப்பு அடிப்படை அளவிலான மாற்றத்தை நோக்கி நகர்வதாகவும்
தற்போது கிழக்கு எல்லையோர பகுதிகளில் சுமார் 40,000 படைவீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் இது வழக்கத்தை விட 10 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்தார்.
மேலும் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நேட்டோ கூட்டமைப்பின் மாநாட்டின் போது கிழக்கு பிராந்தியம் சார்ந்த இறுதிகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.