
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 3102 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஒப்பந்தங்களை பாரத் எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது.
அதாவது பெல் நிறுவனத்தின் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் பிரிவுகளுடன் தனித்தனியாக இரண்டு பொருள்களுக்கான இரண்டு வெவ்வேறு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் பிரிவுடன் இந்திய விமானப்படையின் போர் விமானங்களுக்கான மின்னனு போரியல் அமைப்புகளுக்கான 1993 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தமும்
ஹைதராபாத் பெல் பிரிவுடன் இந்திய விமானப்படைக்கான IEWR – Instrumented Electronic Warfare Range எனும் அமைப்பிற்காக 1109 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் இறுதி செய்யப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.