மும்பை தாக்குதல் சூத்திரதாரி 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பாக் நீதிமன்றம் !!
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் திரட்டியதன் காரணமாக மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹஃபீஸ் சயீத்துக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
70வயதான ஹஃபீஸ் சயீத் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஆவான் ஏற்கனவே ஐந்து வழக்குகளில் 36 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளான் ஆக 68 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தற்போதைய வழக்குகள் பாகிஸ்தானுடைய பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவால் பதியப்பட்ட நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறை தண்டனை மட்டுமின்றி 3 லட்சத்து 40 ஆயிரம் பாகிஸ்தானிய ரூபாய் அபராதமாகவும் கட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவனுடைய ஜமாத் உத் தாவா அமைப்பு தான் மும்பை தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தாய் அமைப்பாகும், மேலும் அமெரிக்கா இவன் தலைக்கு 1 கோடி டாலர் விலை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.