1000 முறை சீன ரஷ்ய விமானங்களுக்கு எதிராக போர் விமானங்களை அனுப்பிய ஜப்பான் !!

  • Tamil Defense
  • April 18, 2022
  • Comments Off on 1000 முறை சீன ரஷ்ய விமானங்களுக்கு எதிராக போர் விமானங்களை அனுப்பிய ஜப்பான் !!

கடந்த ஆண்டு மட்டுமே ஜப்பான் தனது வான்பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன மற்றும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள சுமார் 1000 முறை போர்விமானங்களை அனுப்பியுள்ளது.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி கூறுகையில் அதிகரித்து கொண்டே வரும் அத்துமீறல்கள் தான் இதற்கு மூல காரணம் என்றும் அதற்கு முந்தைய வருடம் 725 முறை போர் விமானங்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீன விமானங்களுக்கு எதிராக ஜப்பான் 722 முறையும் அதற்கு முந்தைய வருடம் 458 முறை தனது போர் விமானங்களை அனுப்பியதாகவும்

கடந்த ஆண்டு ஜப்பானிய விமானப்படையின் விமானங்கள் 300க்கும் அதிகமான முறைகளிலும் அதற்கு முந்தைய ஆண்டு 267 முறையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.