இறுதிக்கட்டத்தை நெருங்கும் ITCM TD திட்டம் !!

  • Tamil Defense
  • April 8, 2022
  • Comments Off on இறுதிக்கட்டத்தை நெருங்கும் ITCM TD திட்டம் !!

நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ITCM TD – INDIGENOUS TECHNOLOGY CRUISE MISSILE TECHNOLOGY DEMONSTRATOR திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ITCM TD என்றால் உள்நாட்டு தொழில்நுட்ப க்ரூஸ் ஏவுகணை தொழில்நுட்ப டெமொ ஏவுகணை திட்டம் என்பது பொருளாகும்.

இந்த திட்டம் மூலமாக சப்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் குறிப்பாக உள்நாட்டு என்ஜின் இவற்றில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏற்கனவே உள்நாட்டு தயாரிப்பான மானிக் சிறிய ரக டர்போ ஃபேன் என்ஜினை இணைத்து ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.