உலகின் முதல் லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரேல் !!

  • Tamil Defense
  • April 17, 2022
  • Comments Off on உலகின் முதல் லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரேல் !!

சமீபத்தில் இஸ்ரேல் உலகின் முதலாவது லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்து ராணுவ உலகில் புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளது.

IRON BEAM எனப்படும் இந்த லேசர் ஆயுதம் மூலமாக தாக்க வரும் ராக்கெட்டுகள், மோர்ட்டார் குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வானிலேயே அழித்துள்ளனர்.

இந்த லேசர் வான் பாதுகாப்பு அமைப்பு 90% வெற்றியை அளித்துள்ளதாகவும் அடுத்த பத்தாண்டுகளில் இஸ்ரேலின் எல்லையோர பகுதிகள் முழுவதும் இவற்றை நிறுவ உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் நாட்டின் RAFAEL ADVANCED DEFENCE SYSTEMS நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.