இஸ்ரேலுக்கு சீனா வழங்கிய பரிசுகளில் உளவு கருவிகள் !!
இஸ்ரேலிய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி துறை அமைச்சரான ஒரித் ஃபர்காஷ் ஹகோஹென் அவர்களுக்கு சீனா யூத பண்டிகை ஒன்றை முன்னிட்டு பரிசுகளை அனுப்பி வைத்தது.
அவற்றில் இருந்த தெர்மல் ஃப்ளாஸ்க் ஒன்றில் ஒரு ஒட்டு கேட்கும் கருவி இருப்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் அமைச்சரின் அலுவலகத்திற்கு பரிசுகள் செல்லும் முன்னரே கண்டுபிடித்து உள்ளனர்.
தற்போது இந்த விவகாரத்தை இஸ்ரேலிய உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட் விசாரித்து வருகிறது சீனா அனுப்பிய அனைத்து பரிசுகளையும் தற்போது ஷின் பெட் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் “ஷின் பெட்” அதிகாரிகள் அனைத்து இஸ்ரேலிய அமைச்சக அதிகாரிகளுக்கும் இத்தகைய சீன பரிசு பொருட்கள் வந்திருந்தால் அது பற்றி உடனடியாக தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இஸ்ரேலிய போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் ஆகியவற்றின் அலுவலகங்களுக்கும் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கும் இத்தகைய பரிசு பொருட்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.