ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இணைக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • April 26, 2022
  • Comments Off on ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இணைக்கும் இந்தியா !!

இந்திய விமானப்படை தனது தாக்குதல் திறனை வலுப்படுத்தும் விதமாக தன்னிடம் உள்ள ரஷ்ய தயாரிப்பு Mi-17 ரக ஹெலிகாப்டர்களில் இஸ்ரேலிய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பொருத்த உள்ளது.

இதற்காக இஸ்ரேலை சேர்ந்த RAFAEL ADVANCED SYSTEMS LIMITED நிறுவனத்தின் SPIKE NLOS (Non Line of Sight) ரக ஏவுகணைகளை தேர்வு செய்துள்ளது, ஏற்கனவே இந்திய தரைப்படை SPIKE MR – Medium Range எனப்படும் மற்றொரு வடிவமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த SPIKE NLOS ரக ஏவுகணைகள் மலை பிரதேசங்களில் கூட தாழ்வாக பறந்து செல்லும் திறன் கொண்டது, மேலும் இவௌ அதிகபட்சமாக சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

கிடைக்கப்பெற்ற சில நம்பத்தகுந்த தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட SPIKE NLOS ஏவுகணைகள் இந்தியா வந்தடைந்து உள்ளதாகவும் மேற்கு எல்லையோர பகுதியில் உள்ள Mi-17 ரக ஹெலிகாப்டர்களில் அவை இணைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த SPIKE NLOS ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்ட Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் லடாக் மற்றும் சீன எல்லையோர பகுதிகளுக்கு அருகே குறிப்பாக சீன டாங்கி படைகள் அதிகமாக குவிக்கப்பட்ட இடத்தில் களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஏற்படுத்திய தாக்கம் அதைடொட்டிய படிப்பினைகளின் அடிப்படையில் இந்திய ராணுவமும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்பதே உண்மையாகும்.