அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் ஊடுருவ முயன்ற பாக் உளவு அமைப்பான ISI !!

  • Tamil Defense
  • April 11, 2022
  • Comments Off on அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் ஊடுருவ முயன்ற பாக் உளவு அமைப்பான ISI !!

பாகிஸ்தானுடைய உளவு அமைப்பான ISI அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கும் SECRET SERVICE படையில் ஊடுருவ முயன்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் தெற்கு பகுதியில் ஏரியன் தாஹீர்ஸாதெ மற்றும் ஹைதர் அலி எனும் இரண்டு நபர்களை அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவான FBI கைது செய்து உள்ளது.

இவர்கள் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளாக தங்களை போலியாக அடையாளபடுத்தி கொண்டு முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவ முயன்றுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு மற்றும் உள்துறை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி உள்ளனர், இதையடுத்து அந்த அதிகாரிகள் அனைவரும் கட்டாய விடுப்பில் செல்ல வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு சுமார் 40,000 டாலர் மதிப்பிலான வீடு, APPLE iPhone, Flat Screen TV, ஜெனரேட்டர், துப்பாக்கி, கண்காணிப்பு அமைப்புகள், ட்ரோன், வாகனங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

மேலும் விசாரணையில் அதிபர் ஜோ பைடனுடைய மனைவியின் பாதுகாப்புக்கு பொறுப்பான SECRET SERVICE அதிகாரிக்கு இருவரும் 2000 டாலர் மதிப்பிலான ASSAULT RIFLE வாங்க உதவ முன்வந்ததும் இருவரும் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரின் மொபைல்களை ஹேக் செய்தது மற்றும் அந்தரங்க தகவல்களை சேகரித்தது தெரிய வந்துள்ளது.

இது தவிர இருவரும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாஸ்போர்ட் வைத்து இருந்ததும் பாகிஸ்தானுடைய உளவு அமைப்பான ISI யுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர்களை பாதுகாக்கும் பொறுப்பை SPG – SPECIAL PROTECTION GROUP எனப்படும் பாதுகாப்பு படையணி மேற்கொண்டு வருகிறது இந்த படை அமெரிக்க SECRET SERVICE ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது கூடுதல் தகவல் ஆகும்.

இவர்களுடன் தொடர்பில் இருந்த அமெரிக்க அதிகாரிகள் FBI, DHS, பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க கடற்படை மற்றும் SECRET SERVICE ஆகிய பல்வேறு அமைப்புகளில் பணியாற்றி வந்தவர்கள் என்பதும் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது.