CSL – COCHIN SHIPYARDS LIMITED கொச்சி கப்பல் கட்டுமான தளத்தால் கட்டமைக்கப்பட்ட முதலாவது உள்நாட்டு போர் கப்பலானது ஆகஸ்ட் மாதம் படையில் இணைய உள்ளது.
இந்த தகவல் ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் தற்போது கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் தொழில்நுட்ப இயக்குனர் பிஜோய் பாஸ்கர் சமீபத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் பேசும் போது அடுத்த மாதம் INS VIKRANT விக்ராந்த் போர் கப்பலின் கடைசி மற்றும் மூன்றாவது கடல் சோதனைகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.