ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மூலமாக எண்ணெய் வாங்க இந்தோனேசியா திட்டம் ??

  • Tamil Defense
  • April 1, 2022
  • Comments Off on ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மூலமாக எண்ணெய் வாங்க இந்தோனேசியா திட்டம் ??

இந்தோனேசிய அரசு இந்திய உதவியுடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதாவது இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிளை பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றன.

இதனையடுத்து மலிவு விலையில் கிடைக்கும் இந்த கச்சா எண்ணெய்யை இந்தியாவின் ரூபாய் கொண்டு வாங்க இந்தோனேசியா விரும்புகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தோனேசியா ரஷ்யாவுடன் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.